சுடச்சுட

    

    மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 09th December 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு, கடலில் காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
    அந்தக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தேவனாம்பட்டினத்தில் காணாமல்போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒக்கி புயலின்போது கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசியுள்ளோம். கடலூரிலிருந்து 3 அதிகாரிகளை கேரளத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆட்சியர் கூறினார்.
    கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், சின்னூர், சொத்திக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள் ஒக்கி புயலால் காணாமல் போயுள்ளனர். இவர்களை பற்றிய எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை. மீனவர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர் மிகுந்த துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
    தமிழக அரசு காணாமல்போன மீனவர்களை தேடுவதில் போதிய கவனம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    தேடுதலில் ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவில்லை எனத் தெரிகிறது. மீனவர்களை தேடுவதிலும், அவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதிலும் முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    அப்போது, கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் ஜி.மாதவன், நகரச் செயலர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai