சுடச்சுட

    

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே குளத்தில் மூழ்கிய 2 மாணவிகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
    விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் மகள் கலைவாணி (13), இளையராஜா மகள் ராசாத்தி (13). இருவரும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர். மாணவிகள் இருவரும் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
    வழியில், ஐயனார் கோயில் குளத்தில் தண்ணீர் பிடிக்க ராசாத்தி சென்றார். அப்போது, அவர் குளத்துக்குள் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற கலைவாணியும் நீரில் விழுந்தார்.
    இதைப்பார்த்த உடன் வந்த மாணவி ஒருவர், மாணவிகளின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
    இதையடுத்து, அவர்கள் குளத்துக்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாணவிகள் இருவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
    தகவலறிந்த விருத்தாசலம் காவல் துறையினர் சிறுமிகளின் சடலங்களைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai