Enable Javscript for better performance
வெளியேறும் புதைச் சாக்கடை: சுனாமி நகரில் சுகாதாரச் சீர்கேடு- Dinamani

சுடச்சுட

    

    வெளியேறும் புதைச் சாக்கடை: சுனாமி நகரில் சுகாதாரச் சீர்கேடு

    By DIN  |   Published on : 09th December 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுனாமி நகரில் புதைச் சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள சுனாமி நகரில் சுமார் 650 குடியிருப்புகள் உள்ளன. கடலூர் நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தப் பகுதியில் புதைச் சாக்கடைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் நியாயவிலைக் கடைக்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஆள்நுழைவு குழாய் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்தக் கழிவு நீர் சாலை வழியாகச் சென்று சில மீட்டர் தூரமுள்ள மற்றொரு ஆள்நுழைவு குழிக்குள் செல்கிறது. அந்த குழியும் நிறைந்து விட்டால் கழிவுநீர் தெருவில் வழிந்தோடும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலை கடந்த சில மாதங்களாக நீடித்து வருவதாக தெருவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
    நியாய விலைக் கடை முன் எப்போதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நகரின் மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டதை விட இங்கு மிகச் சிறிய அளவிலான குழாயே அமைக்கப்பட்டுள்ளதாம். இதனால், மண் அடைத்து விட்டாலே கழிவுநீர் வெளியேறி விடுகிறது. எனவே, புதைச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாயை பெரிய அளவில் அமைக்க வேண்டும். தாற்காலிகத் தீர்வாக குழாய்க்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai