எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
By DIN | Published on : 10th December 2017 02:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி, கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் கோ.பூவராகமூர்த்தி தலைமை வகித்து, உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றனர். என்சிசி அலுவலர் ஆ.ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகக்
கலந்துகொண்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் க.கதிரவன், எச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். பின்னர், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மாணவர்கள் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளி முன் மாணவர்கள் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலியாக அணிவகுத்து நின்றனர். முடிவில், ஆசிரியர் செயலர் எஸ்.ஞானசேகர் நன்றி கூறினார்.