சுடச்சுட

  

  ஒக்கி புயலில் சிக்கி காணாமல்போன மீனவர்களின் குடும்பத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
  பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் கிராமத்தைச் சேர்ந்த ராமையா (55), கோவிந்தராஜ் (40), சங்கர் (48) ஆகிய 3 பேரும் கடந்த 20 நாள்களுக்கு முன்னர் கேரளம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் ஒக்கி புயலில் சிக்கி இவர்கள் காணாமல்போயினர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
  இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசைப் போல தமிழக அரசும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
  கட்சியின் மாவட்ட செயற்குழு கற்பனைச்செல்வம், ஒன்றியச் செயலர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai