Enable Javscript for better performance
பண்ருட்டியில் சொத்து வரி சீராய்வால் தவிக்கும் மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டியில் சொத்து வரி சீராய்வால் தவிக்கும் மக்கள்

    By DIN  |   Published on : 10th December 2017 02:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சொத்து வரி சீராய்வு என்ற பெயரில் பண்ருட்டி நகராட்சியில் உள்ள கட்டடங்களுக்கு 13 அரை ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்தமாக வரி வசூலிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
    மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள வர்த்தகக் கட்டடங்கள், குடியிருப்புகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வரி உயர்வு செய்யப்படும். வரி மூலம் கிடைக்கும் வருவாய், பொது நிதியில் சேர்க்கப்பட்டு, நகரின் அத்தியாவசியப் பணிகள், வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
    பண்ருட்டி நகராட்சியில் தற்போது வீடுகளுக்கு சதுர அடி அடிப்படையிலான வரி விதிப்பை வரி வசூலிப்பாளர்கள் அமல்படுத்தியுள்ளனர். அதற்கான நோட்டீஸையும் வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்தப் புதிய முறையால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, வீட்டு உரிமையாளர்கள் வரியாக மட்டுமே பல ஆயிரம் ரூபாயைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
    இதுகுறித்து பண்ருட்டி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் கூறியதாவது: தமிழக அரசு சார்பில், கட்டடங்களை அளவீடு செய்து, 1.10.2011 முதல் 13 அரை ஆண்டுகளுக்கான வரியை ஒட்டு மொத்தமாக செலுத்திடக் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
    கடந்த காலம்போல 10, 15 சதவீதம் வரியை உயர்த்தாமல் பல மடங்கு உயர்த்துவது நியாயமல்ல. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வருவாய் குறைந்து, விலைவாசி உயர்ந்துள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
    அரசுக்கு வருவாய் வர வேண்டியது அவசியம்தான். ஆனால், தாங்க முடியாத அளவுக்கு வரியை உயர்த்துவது ஏற்புடையதல்ல. எனவே, தற்போதைய யதார்த்த சூழலைக் கருத்தில்கொண்டு புதிய வரி உயர்வையும், அதற்காக அளவீடு செய்வதையும், மொத்தமாக வரி செலுத்தக் கூறுவதையும் கைவிட வேண்டும் என்றா அவர்.
    இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெங்கடாசலம் கூறியதாவது: சொத்து வரி உயர்த்தப்படவில்லை. வரி விதிப்பு செய்யப்படாமல் விடுபட்ட கட்டடங்கள், குறைந்த மதிப்பீட்டில் வரி விதிப்பு செய்யப்பட்ட கட்டடங்கள், வரி விதிப்பு செய்யப்படாத கூடுதல் கட்டடங்களை கணக்கெடுத்து வரி விதிப்பு செய்யப்படுகிறது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai