சுடச்சுட

    

    பல்பொருள் அங்காடியில் திருடியதாக அண்ணன், தங்கை சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி வட்டம், அங்குசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் என்ற நாராயணாசாமி. இவர், கடலூர் சாலையில் மத்திய கூட்டுறவு வங்கி அருகே பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை இவரது கடைக்கு வந்த ஆண், பெண் இருவர் சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை நூதன முறையில் திருடிச் சென்றது கண்காணிப்பு கேமரா மூலம் தெரிய வந்தது. இந்த நிலையில், அதே நபர்கள் சனிக்கிழமையும் பல்பொருள் அங்காடிக்கு வந்தனர். இதையறிந்த கடையின்
    உரிமையாளர் நாராயணசாமி, பண்ருட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
    இதையடுத்து, அங்காடிக்கு விரைந்து வந்த போலீஸார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
    விசாரணையில், அவர்கள் பண்ருட்டி வட்டம், வடுகப்பாளையம் கிராமம், புதுநகரைச் சேர்ந்த தனுசு மகன் ராஜா (34), அவரது சகோதரி புதுச்சேரி, ஆலங்குப்பம், பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த டெல்லிநாதன் மனைவி உமாதேவி(33) எனத் தெரியவந்தது. இவர்கள் பொருள்களை திருடியதை ஒப்புக்கொண்டனராம். இதையடுத்து போலீஸார் அவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai