சுடச்சுட

  

  திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  கடந்த 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் இந்து கோயில்கள் பற்றி பேசிய கருத்து இந்து அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டது. எனினும், தான் தவறான கருத்தை தெரிவிக்கவில்லையென திருமாவளவன் விளக்கம் அளித்த நிலையில், அவரது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படுமென இந்து முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் திருப்பூர்கோபிநாத் அறிவித்தார்.
  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகரச் செயலர் கெளதமன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோபிநாத்தின் உருவப் பொம்மையை எரித்தனர். இதில் முன்னாள் மாவட்ட செயலர் தயா.தமிழன்பன், நிர்வாகிகள் கார்த்திகேயன், ஜான்.செங்குட்டுவன், முருகானந்தம், அர்ச்சுணன், ஜேம்ஸ், கென்சன்பிரபு, இளமங்கலம் பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  இதேபோல விருத்தாசலம் பாலக்கரையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, உருவப் பொம்மையை எரித்தனர்.
  வடலூர் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாகப் பேசிய இந்து அமைப்பினரை கண்டிப்பதாகக் கூறி, வடலூர் நான்கு முனைச் சந்திப்பில் அந்தக் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலர் அ.கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் சிவசக்தி, அ.சந்திரசேகர், ஆறுமுகம், வ.க.பார்த்திபன், ராஜதுரை, பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் உள்ளிட்டோரை கண்டித்து முழக்கமிட்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai