சுடச்சுட

    

    என்எல்சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரம்  

    By  நெய்வேலி,  |   Published on : 11th December 2017 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என்எல்சி இந்தியா நிறுவன பங்கு விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் பிரசார இயக்கம் நடத்தினர்.
     நெய்வேலியில் நவம்பர் மாதம் நடைபெற்ற அந்தக் கட்சியின் 22-ஆவது நகர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்த இயக்கம் நடைபெற்றது. நெய்வேலி ஆர்ச் கேட், இந்திரா நகர், ஸ்டோர் ரோடு, வாட்டர் டேங்க், மெயின் பஜார், புதுக்குப்பம் ரவுண்டானா, வட்டம் 21 பேருந்து நிறுத்தம், சூப்பர் பஜார், பெரியாக்
     குறிச்சி, ஜெயப்பிரியா பேருந்து நிறுத்தம், தெற்கு வெள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் இயக்கம் நடைபெற்றது.
     பிரசாரத்தின்போது, என்எல்சி பங்கு விற்பனை, சுரங்கங்களில் அவுட்சோர்ஸிங் முறையைக் கைவிட வேண்டும். ஊதிய மாற்று, போனஸ்-இன்சென்டிவ் ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
     நிலம், வீடு அளித்தோர் மற்றும் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்களுக்கு என்எல்சி-யில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், விருத்தாசலத்தில் டிச.16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 22-ஆவது மாவட்ட மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினர்.
     நகரச் செயலர் ஆர்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.முத்துவேல், எஸ்.திருஅரசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.வேல்முருகன், எம்.மீனாட்சிநாதன், ஜி.குப்புசாமி, டி.ஜெயராமன், நகரக் குழு உறுப்பினர்கள் கே.மணி, ஆர்.மணி, எம்.சீனுவாசன், எம்.ராமமூர்த்தி, எம்.சுந்தர், வி.குமார், கே.திருவேங்கடம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai