Enable Javscript for better performance
குரு மரியாதை பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், 14-ஆம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா, பண்ருட்டி வட்டம், பூங்குணம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     விழாவில், ஆந்திரம் மாநிலம், சித்தூர் பூதலப்பட்டு தவயோகி ஸ்ரீலஸ்ரீ சங்கர சுவாமிகள் கலந்துகொண்டு சிவ பூஜையை தொடக்கி வைத்து ஆசி வழங்கினார். பூங்குணம் செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமி சிலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
     அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜி ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார்.
     விழாவுக்கு முன்னிலை வகித்த கெüரவத் தலைவர் என்.வாசுதேவன், 14-ஆவது ஆண்டு குருமார்கள் லட்சார்ச்சனையை தொடக்கி வைத்தார். ஐயப்ப சேவா ரத்தினம் பாலக்காடு கே.பங்கஜாக்ஷ குருசுவாமிகள் கலந்துகொண்டனர்.
     வரவேற்புக் குழுத் தலைவர் என்.ராஜேந்திரன், செயலர் எம்.சம்பந்தம், துணைத் தலைவர்கள் எம்.கணேசன், ஆர்.ஆனந்தன், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai