Enable Javscript for better performance
கொசுப் புழு ஒழிப்பு களப் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கொசுப் புழு ஒழிப்பு களப் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கக் கோரிக்கை

    By  கடலூர்  |   Published on : 11th December 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொசுப் புழு ஒழிப்பு களப் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
     தமிழ்நாடு கொசுப்புழு அழிப்பு களப் பணியாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் சி.அருணகிரி தலைமை வகிக்க, பொதுச் செயலர் தயாளன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை வரவேற்றார்.
     தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் உ.மா.செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மத்திய செயற்குழு உறுப்பினர் சிவகுரு, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அலுவலர் சங்க மாநிலத் தலைவர் பெ.நல்லதம்பி, ஜாஸ்மின்ஸ் அமைப்பின் மாநிலத் தலைவர் ம.ரா.சிங்காரம், தமிழ்நாடு அரசு நுண்கதிர் தொழில்நுட்பப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் என்.சுந்தர்ராஜா, அரசுப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் செல்வநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
     கூட்டத்தில், பொது சுகாதாரம், உள்ளாட்சி, பேரூராட்சி ஆகிய துறைகளில் பணியாற்றும் கொசுப்புழு ஒழிப்பு களப் பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு நாள் ஊதியமாக ரூ.500 வழங்க வேண்டும். இந்தப் பணியை ஆண்டுமுழுவதும் வழங்கிட வேண்டும். ஒவ்வொரு துணை சுகாதார மையத்துக்கும் 2 பேரை பணிநியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     கூட்டத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, மதுராந்தகம், திருச்சி ஆகிய சுகாதார மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்க மாநிலப் பொருளாளர் நாகராஜ் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai