Enable Javscript for better performance
செட்டாப் பாக்ஸ் வழங்குவதில் முறைகேட்டைத் தடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    செட்டாப் பாக்ஸ் வழங்குவதில் முறைகேட்டைத் தடுக்க வலியுறுத்தல்

    By  கடலூர்,  |   Published on : 11th December 2017 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு கேபிள் டி.வி.க்கான செட்டாப் பாக்ஸ் வழங்குவதில் முறைகேடுகளை தடுக்க வேண்டுமென நுகர்வோர் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
     தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு சிறப்பு பொதுக் குழு கூட்டம், கடலூரில் அதன் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து நுகர்வோர் நீதிமன்றங்களிலும் நீதிபதி, உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
     நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2015-ஐ வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். உணவுப் பாதுகாப்பு, தரம் மற்றும் மருந்துச் சட்டத்தின் கீழ் வியாபாரிகள், உணவு விடுதிகள் கட்டாயப் பதிவுக்கு கடந்த அக்டோபர் மாதத்துடன் அவகாசம் முடிக்கப்பட்டுள்ளது.
     இதுவரை பதிவு செய்யாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களை அழைத்து நடத்தப்படும் காலாண்டுக் கூட்டங்களை நடத்த வேண்டும். அரசு, தனியார் பேருந்துகளில் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     அரசு கேபிள் டிவிக்கான செட்டாப் பாக்ஸ் வழங்குவதில் முறைகேடுகளை களைய வேண்டும். 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நுகர்வோர் தின மாநில மாநாட்டை கடலூரில் நடத்துவது. தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.
     தனியார் மருத்துவமனை ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தி, அனைத்து தனியார் மருத்துவமனை கட்டணங்களையும் ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai