சுடச்சுட

  

  இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவும், சுயதொழில் தொடங்கவும் ஏதுவாக, கடலூரில் உள்ள எம்ஜிஆர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்க நகை மதிப்பீடு, தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
   வருகிற 16-ஆம் தேதி தொடங்கும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பக் கட்டணமாக ரூ.100, பயிற்சிக் கட்டணமாக ரூ.4,543 செலுத்த வேண்டும். இரண்டு மாதங்களில் மொத்தம் 100 மணி நேரம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சியாகும்.
   பயிற்சியின்போது அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய அடிப்படை விவரம், விலை கணக்கிடும் முறை, தூய தங்கத்தை பரிசோதிப்பது குறித்து விளக்கப்படும். பயிற்சிக்குப் பின்னர் வழங்கப்படும் சான்றிதழை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துக் கொள்ள முடியும்.
   மேலும், வங்கி நகை பரிசோதகர் பணி, நகை அடகுக் கடைகளில் பணியாற்றவும், சுய தொழில் தொடங்கவும் பயன்படுத்தலாம்.
   எனவே, பயிற்சியில் சேர விரும்புவோர் கடலூர் கடற்கரை சாலையில் கூட்டுறவு வங்கி வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி தெரிவித்தார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai