சுடச்சுட

    

    திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை: வட்டாட்சியரிடம் தமுமுக மனு

    By கடலூர்,  |   Published on : 11th December 2017 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கட்டணக் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர். 
    இதுகுறித்து அந்தக் கட்சியின் நகரத் தலைவர் சாகுல்அமீது திட்டக்குடி வட்டாட்சியரிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 2007-08-ஆம் ஆண்டில் அப்போதைய எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.2.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டணக் கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால், இந்தக் கழிப்பறை இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், மருத்துவமனைக்கு வந்துச் செல்லும் நோயாளிகள், பார்வையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்தக் கழிப்பறையை சீரமைத்து, உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தினார். நிர்வாகிகள் இதயத்துல்லா, சையது சுபேதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai