சுடச்சுட

    

    நியாயவிலைக் கடையில் அரிசி கடத்தலை தடுத்த அதிகாரி சிறைவைப்பு

    By  நெய்வேலி,  |   Published on : 11th December 2017 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலியில் நியாய விலைக் கடையிலிருந்து அரிசி கடத்த முயன்றதை புகைப்படம் எடுத்த வருவாய் ஆய்வாளரை கடை ஊழியர் சிறை வைத்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
     கடலூர் மாவட்டம், நெய்வேலி 4-ஆவது வட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக ராமலிங்கமும், கட்டுமம் செய்பவராக சேகர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடையிலிருந்த சேகரும், மற்றொரு நபரும் சேர்ந்து, கடை வாசலில் நின்றிருந்த என்எல்சி ஜீப்பில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.
     அப்போது, அந்த வழியாக வந்த வருவாய் ஆய்வாளர் கருப்பையா இதனை தனது செல்லிடப்பேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இதையறிந்த சேகரும், அவருடன் இருந்தவரும் வருவாய் ஆய்வாளரை நியாய விலைக் கடைக்குள் அடைத்து வைத்தனர். அங்கிருந்து தப்பி வந்த வருவாய் ஆய்வாளர் கருப்பையா குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணிக்கு தகவல் அளித்தார்.
     அதற்குள் நியாய விலைக் கடையை பூட்டிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்து நியாய விலைக் கடைக்கு வந்த வட்டாட்சியர் ஜான்சிராணி, சேகரை அழைத்து கடையை திறக்கச்செய்து சோதனை நடத்தினார். அப்போது வெளியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு மூட்டை அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைக்குப் பின்னர் நியாய விலைக் கடையை அதிகாரிகள் பூட்டிச் சென்றனர். ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சுமித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
     கடத்தல் அரிசி மூட்டை ஏற்றப்பட்ட என்எல்சி ஜீப் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து நியாய விலைக் கடை ஊழியர்களிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தப்பட உள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai