சுடச்சுட

    

    பாலியல் வழக்கில் பிணையில் வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
     புதுவை மாநிலம், பெருங்கனூரைச் சேர்ந்தவர் கண்ணாயிரம் என்ற ராஜீவ்காந்தி (32). கூலித் தொழிலாளியான இவர், சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் வெளியே வந்துள்ளார்.
     இதையடுத்து, கடலூர் அருகே உள்ள தரமேடு புதுக் காலனியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த ராஜீவ்காந்தி, அங்கிருந்து காவல் நிலையத்துக்குச் சென்று கையெழுத்து போட்டு வந்தார். இந்த நிலையில், தான் தங்கியிருந்த அறையில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
     தகவலறிந்த தூக்கணாம்பாக்கம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ராஜீவ் காந்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai