சுடச்சுட

    

    விருத்தாசலத்தில் மணல், கூழாங்கற்கள் கடத்தியதாக 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
     விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் விருத்தாசலம் பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் சென்ற 2 லாரிகளை வழிமறித்து சோதனையிட்டதில் உரிய அனுமதியின்றி மணல், கூழாங்கற்கள் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
     இதேபோல, மங்கலம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவலர்கள் பில்லூர் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி மயிலாடுதுறையிலிருந்து திருவண்ணாமலைக்கு மணல் கடத்திச் சென்றதாக ஒரு லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநர் விஜயகுமாரை (24) கைது செய்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai