சுடச்சுட

  

  சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் திருடியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
   சிதம்பரம் நகர காவல் நிலைய தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன், தலைமைக் காவலர் திலீப் மற்றும் போலீஸார் சனிக்கிழமை இரவு பேருந்து நிலையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சிதம்பரம் மீனவர் காலனியைச் சேர்ந்த அரவிந்தன் (20) (படம்) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த இளைஞர் கடந்த 7-ஆம் தேதி கீழரதவீதியில் நிறுத்தப்பட்டிருந்த சி.கொத்தங்குடியைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்ததாம்.
   இதனையடுத்து போலீஸார் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி, அரவிந்தை கைதுசெய்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நகர காவல் நிலைய ஆய்வாளர் கே.குமார் வழக்குப் பதிவு செய்து அரவிந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai