சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல்: 90 பேர் கைது

    By  கடலூர்/நெய்வேலி,  |   Published on : 11th December 2017 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 90 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
     அந்தக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்துக் கோயில்கள் குறித்து தெரிவித்த கருத்து, இந்து அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக இந்து முன்னேற்றக் கழக நிறுவனர் திருப்பூர் கோபிநாத் தெரிவித்தார்.
     அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடலூர் பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட துணைச் செயலர்
     த.ஸ்ரீதர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர்.
     அப்போது, கோபிநாத், பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் உருவ பொம்மையை பறித்துக் கொண்டார். இதையடுத்து கட்சியினர் பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கோபிநாத், எச்.ராஜா ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
     இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 90 பேரை திருப்பாதிரிபுலியூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
     குறிஞ்சிப்பாடி: இதேபோல, குறிஞ்சிப்பாடியில் இந்து முன்னணி கழகத் தலைவர் கோபிநாத்தின் உருவ பொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 17 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
     குறிஞ்சிப்பாடி ஒன்றிய, நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே கோபிநாத்தின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு,
     கடலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். குறிஞ்சிப்பாடி மைய ஒன்றியச் செயலர் ச.ம.குரு, மேற்கு சிவசக்தி, கோவிந்தன், நகரச் செயலர் பாலமுருகன், வடலூர் நகரச் செயலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற கட்சியின் நகரச் செயலர் பாலமுருகன் உள்ளிட்ட 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     நெய்வேலி: இதேபோல, நெய்வேலியில் சனிக்கிழமை இரவு, கோபிநாத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் துரை.மருதமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai