சுடச்சுட

    

    வீரட்டானேஸ்வரர் கோயிலில் இன்று சோமவார விழா

    By  நெய்வேலி,  |   Published on : 11th December 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி, திருவதிகை ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத 4-ஆவது சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
     இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான முதல், இரண்டு மற்றும் மூன்றாம் சோமவார நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த நிலையில், திங்கள்கிழமை 4-ஆவது சோமவார விழா நடைபெற உள்ளது. இதில், மதியம் 2 மணிக்கு ஸ்ரீவீரட்டானேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகமும், தொடர்ந்து சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை 7 மணிக்கு ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீவீரட்டானேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் மாட வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai