சுடச்சுட

    

    ஸ்ரீசத்ய ப்ரமோத தீர்த்த சுவாமிகள் நூற்றாண்டு விழா: கடலூர் வந்தடைந்த ரத யாத்திரைக்கு வரவேற்பு

    By  கடலூர்,  |   Published on : 11th December 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்திராதி மடத்தின் பீடாதிபதி 1008 ஸ்ரீஸ்ரீசத்ய ப்ரமோத தீர்த்த சுவாமிகளின் நூற்றாண்டு விழா ரத யாத்திரை கடலூரை வந்தடைந்தது. யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
     1008 ஸ்ரீஸ்ரீசத்ய ப்ரமோத தீர்த்த சுவாமிகளின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது பொற்பாதத்துடன் கூடிய ரத யாத்திரை காஷ்மீர் முதல் கன்னியா
     குமரி வரை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக சனிக்கிழமை கடலூர் கூத்தப்பாக்கத்திலுள்ள ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்துக்கு ரத யாத்திரை வந்தது.
     முன்னதாக ரத யாத்திரைக்கு திருப்பாதிரிபுலியூர் வரதராஜப் பெருமாள் கோயில் சந்திப்பிலிருந்து கடலூர் ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கம் சார்பில் அதன் தலைவர் கே.எஸ்.குருமூர்த்தி தலைமையில் பாதுகை மற்றும் உடன்வந்த வேத விற்பன்னர்களுக்கு பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுடன் ரத யாத்திரை பிருந்தாவனம் வந்தடைந்தது.
     அங்கு பண்டிதர்களின் உபன்யாசம், சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த விளக்கம் மற்றும் காணொலிக் காட்சி ஆகியவை நடத்தப்பட்டது. பின்னர், பக்தர்கள் ரதத்தில் வரப்பெற்ற பொற்பாதத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்.
     பூஜைகள் முடிந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பூஜைகளுடன் பிருந்தாவனத்திலிருந்து ரத யாத்திரை புறப்பட்டுச் சென்றது. பெங்களூரை சென்றடைந்ததும் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
     நிகழ்ச்சியில், சங்கச் செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலர் ஜி.சத்யநாராயணன், துணைத் தலைவர் ஜி.குருராகவேந்திரன், பொருளாளர் வி.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai