சுடச்சுட

    

    பண்ருட்டி நேதாஜி நகரைச் சேர்ந்த ஜி.ரங்கநாதன் (80) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டன. உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக புதுச்சேரி அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
     இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர் மோகன்ராஜ், ரோட்டரி கிளப் ஆஃப் பண்ருட்டி நிர்வாகிகள் காமராஜ், ஏழுமலை, ரவிசேகர், ஆர்.ஜெயலட்சுமி ஆகியோர் செய்தனர்
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai