சுடச்சுட

    

    காசோலை மோசடி வழக்கு: பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு 6 மாத சிறை

    By  சிதம்பரம்  |   Published on : 12th December 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காசோலை மோசடி வழக்கில், பணி ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியைக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
     புவனகிரியைச் சேர்ந்த அர்ச்சுணன் என்பவரிடம், சிதம்பரம் அருகே உள்ள சாலியாந்தோப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியை கன்னியாகுமரி (59) அவசர தேவைக்காக 2014-ம் ஆண்டு ரூ.6 லட்சம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
     பின்னர் பணத்தை திருப்பிக் கேட்டபோது கன்னியாகுமரி, அர்ச்சுணனுக்கு தனது காசோலையை வழங்கியுள்ளார். காசோலையை வங்கியில் செலுத்திய போது கடந்த 8-4-2014 அன்று பணம் இல்லாமல் திரும்பியது.
     இதையடுத்து அர்ச்சுணன் சிதம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணை முடிவுற்று சிதம்பரம் குற்றவியல் நடுவர் எண்-1 நீதிமன்ற நீதிபதி பார்த்தீபன் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
     தீர்ப்பில் கன்னியாகுமரிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.6 லட்சம் தொகையை இருமாத தவணையில் செலுத்த வேண்டும் என்றும், செலுத்தத் தவறினால் கூடுதலாக இரு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai