சுடச்சுட

    

    காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By  கடலூர்,  |   Published on : 12th December 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒக்கி புயலில் சிக்கி காணாமல்போன மீனவர்களை மீட்கக் கோரி, கடலூரில் தமிழ்நாடு மீனவர் பேரவையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     கடலூர் மாவட்டத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக கன்னியாகுமரி, கேரள மாநிலத்துக்குச் சென்ற மீனவர்கள் 40 பேர், கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வீசிய ஒக்கி புயலால் காணாமல்போயினர். இவர்களில் பலர் திரும்பி வந்த நிலையில், 16 பேர் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
     எனவே, காணாமல்போன மீனவர்கள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், கடலூர் முதுநகரில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     ஆர்ப்பாட்டத்துக்கு பேரவையின் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் என்.மாரியப்பன், மாநிலச் செயலர் எஸ்.கெஜேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கண்டன உரையாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி தி.ச.திருமார்பன், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.குமார், இணை ஒருங்கிணைப்பாளர் கே.சிவாஜிகணேசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
     பேரவை நிர்வாகிகள் லதா விஜயகுமார், ஆர்.சுகுணா, வி.சிவக்குமார், டி.கந்தசாமி, பி.கோகிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai