சுடச்சுட

  

  திட்டக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவர் உயிரிழந்தார்.
   திட்டக்குடி அருகே உள்ள தொண்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் ரித்திக் ரோஷன் (10). தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தாவின் வயலில் மரவள்ளி கிழங்கு எடுக்க தனது அம்மா,பாட்டியுடன் சென்ற மாமவர் அங்கு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள கிணற்றில் ரித்திக் ரோஷன் தவறி விழுந்தார். அண்மையில் பெய்த மழையால் கிணற்றில் தண்ணீர் முழுகொள்ளளவை எட்டியிருந்ததால் சிறுவனை உடனடியாக மீட்கமுடியவில்லை.
   தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 3 மணி நேரம் போராடி ரித்திக் ரோஷனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வேப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai