சுடச்சுட

  

  குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  By  கடலூர்,  |   Published on : 12th December 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி, அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பினர், திங்கள்கிழமை நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   கடலூர் ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளில் எரியாத தெரு விளக்குகளை சரிசெய்தல், குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்தல், பழைமையான குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும், அரசு கேபிள் டிவி இணைப்புக்கு நிர்ணயம் செய்த தொகையான ரூ.200-க்குப் பதிலாக கூடுதலாக தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும், நகராட்சியிலுள்ள கம்மியம்பேட்டை, பார்வையற்றோர் பள்ளி, கூத்தப்பாக்கம், உப்பலவாடி, கோண்டூர் பகுதிகளில் மழைநீர் செல்ல உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
   ஒக்கி புயலால் காணாமல்போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் முகக் கவசம், சட்டைகளில் கறுப்பு வில்லை அணிந்திருந்தனர்.
   ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் மு.மருதவாணன் கண்டன உரையாற்றினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் மனோகரன், மணிவண்ணன், காசிநாதன், மாயவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   முன்னதாக துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்க, பொருளாளர் பி.சுகுமாறன் நன்றி கூறினார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai