சுடச்சுட

  

  கடலூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 60 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
   இந்து கோயில்கள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்தொல்.திருமாவளவன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில், தொல்.திருமாவளவனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர்.
   அதன்படி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி வழங்கி பின்னர் மறுத்த நிலையில், திட்டமிட்டபடி மாவட்டத் தலைவர் தேவ.சரவணசுந்தரம் தலைமையில் அந்தக் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன் கூடினர். அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பாஜகவினரை கைதுசெய்வதாக தெரிவித்தனர். அப்போது கட்சியினர் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகிகள் மு.சக்திகணபதி, பொன்னிரவி, சந்தானகிருஷ்ணன், நகரத் தலைவர் ஏ.எம்.வெங்கடேசன், இளைஞரணித் தலைவர் கே.அன்பு, நிர்வாகிகள் பாபுராஜ், விஸ்வநாதன், நடராஜன், சிவசங்கர் உள்ளிட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai