சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி, கடலூரில் பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   இந்த மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளான திருப்பாதிரிபுலியூர் - கடலூர் முதுநகர் சாலை, கடலூர் - நெல்லிக்குப்பம் சாலை, கடலூர் - புதுச்சேரி சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளான திருப்பாதிரிபுலியூர் - வண்டிப்பாளையம், கம்மியம்பேட்டை - கெடிலம்சாலை - செம்மண்டலம் உள்ளிட்ட சாலைகள் அண்மையில் பெய்த மழையால் பலத்த சேதமடைந்தன.
   எனவே, இந்தச் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
   கடலூர் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் புதை சாக்கடை திட்ட சீர்கேடுகளை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவையினர் கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஆர்ப்பாட்டத்துக்கு பேரவைத் தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். செயலர் என்.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
   தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலர் எம்.நிஜாமுதின், தனியார் பேருந்து தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் எம்.குருராமலிங்கம், பொருளாளர் ஏ.விஜயன், மக்கள் விழிப்புணர்வு மையம் இ.மலையமான், நுகர்வோர் அமைப்புத் தலைவர் தி.அருள்செல்வம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai