Enable Javscript for better performance
ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ்

    By  நெய்வேலி  |   Published on : 12th December 2017 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி நிரந்தரம் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினர்.
     உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படிஎன்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இந்த நிலையில், திங்கள்கிழமை சங்கத் தலைவர் ராச.உக்கரவேல் தலைமையில், பொதுச் செயலர் கே.வெங்கடேசன் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக தலைமை அலுவலகத்துக்குச் செல்ல ஒன்றுகூடினர். பேரணி நடத்த நீதிமன்ற தடை உள்ளதாகக் காவல் துறையினர் கூறியதை அடுத்து சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
     தொடர்ந்து, சங்கத் தலைவர் ராச.உக்கரவேல், பொதுச் செயலர் கே.வெங்கடேசன், பொருளாளர் ஆர்.சம்பத், அலுவலகச் செயலர் குணசேகரன் ஆகியோர், என்எல்சி இந்தியா நிறுவன தலைமை அலுவலகத்துக்குச் சென்று, மனித வளத் துறை முதன்மைப் பொதுமேலாளர் சி.தியாகராஜூவை சந்தித்து வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினர்.
     பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களது 7 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற என்எல்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வருகிற 27-ஆம் தேதிக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai