சுடச்சுட

  

  கடலூரில் பாரதியார் பிறந்த நாள் விழா பல்வேறு அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
   கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில், மன்றத் தலைவர் கடல் நாகராஜன் தலைமையில் பாரதியார் பிறந்த நாள் விழா கடலூரில் கொண்டாடப்பட்டது. வங்கி ஊழியர் சங்க நிர்வாகி கே.திருமலை வரவேற்றுப் பேசினார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் இரா.சண்முகம், பாரதியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். தொடர்ந்து பாரதியார் பாடல்கள் பாடும் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக் குழு துணைத் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கினார். ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.
   மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.கே.மூர்த்தி தலைமை வகித்து பாரதியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட நிர்வாகிகள், இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.
   கடலூரில் உள்ள துர்கா பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றத் தலைவர் கடல்நாகராஜன் தலைமை வகித்தார். ஐந்தாம் உலகத் தமிழச் சங்க நிறுவனர் இராம.முத்துக்குமரனார் பங்கேற்று பாரதியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எழுத்தாளர் உ.ராஜமாணிக்கம் வாழ்த்திப் பேசினார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
   முன்னதாக, கல்லூரி முதல்வர் செந்தில்முருகன் வரவேற்க, ஆசிரியர் கந்தன் நன்றி கூறினார்
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai