Enable Javscript for better performance
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். இதில், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 516 மனுக்கள் அளிக்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் மனு அளிக்க ஒதுக்கப்பட்ட இடத்துக்கு, ஆட்சியர் நேரில் சென்று மனுக்களைப் பெற்றார்.
     பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித் துணை ஆட்சியர்கள் கூஷ்ணாதேவி (ச.பா.தி), சேதுராமன் (முத்திரைத்தாள்), மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai