சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
     21 மாத ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும்.
     நிரந்த ஊதியம் விகிதம் இல்லாத பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்ஜியோ) சார்பில், கடலூரில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
     போராட்டத்துக்ககு மாவட்ட அமைப்பாளர் துரை.சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்பு மாவட்டச் செயலாளர் எம்.ராசாமணி, ஜாக்ஜியோ இணை அமைப்பாளர்கள் த.சிவக்குமார், டி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் உண்ணாவிரதத்தை தொடக்கிவைத்துப் பேசினார். மாநில துணை அமைப்பாளர் கு.சரவணன் போராட்டத்தை முடித்து வைத்தார். நிர்வாகிகள் எஸ்.கோபால்சாமி, கே.பலராமன், ஏ.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     கடலூர் வட்டச் செயலாளர் வி.விவேகானந்தன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai