சுடச்சுட

  

  ஆழ்துளைக் கிணறு அமைப்பு: எம்எல்ஏ தொடக்கி வைத்தார்  

  By கடலூர்,  |   Published on : 13th December 2017 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகு மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட்டது.
  விருத்தாசலம் நகராட்சி 14-ஆவது வார்டுக்கு உள்பட்ட தாஷ்கண்ட் நகர் பாடசாலை வீதியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தரவேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, விருத்தாசலம் எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். இதற்கான பணிகள் நிறைவுற்ற நிலையில், ஆழ்துளைக் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கே.பாலு தலைமை வகித்தார். வி.டி.கலைச்செல்வன் எம்எல்ஏ ஆழ்துளைக் கிணறு செயல்பாட்டினை தொடக்கிவைத்தார். 
  நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் எல்.ராஜசேகரன், சி.காமராஜ், டி.நடராஜன், பி.அருளாகரன், டி.ரத்தினராஜன், பாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai