சுடச்சுட

    

    காங்.தலைவராக ராகுல் தேர்வு: கட்சியினர் கொண்டாட்டம்

    By  கடலூர்,  |   Published on : 13th December 2017 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதை, கடலூரில் அந்தக் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
     காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அவர் வரும் 16-ஆம் தேதி பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்.
     கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பதை முன்னிட்டு, கடலூர் நகர காங்கிரஸார் நகரத் தலைவர் என்.குமார் தலைமையில் திருப்பாதிரிப்புலியூரில் செவ்வாய்க்கிழமை பட்டாசு, வெடித்துக் கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினர்.
     மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநில மீனரவணி பொதுச் செயலாளர் கடல்கார்த்தி, மாவட்டச் செயலாளர்கள் கே.பார்த்திபன், கிஷோர்குமார், காமராஜ், முருகன், பி.ராஜ்குமார், பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், சாந்திராஜ், நிர்வாகிகள் ஆர்.ராஜாராம், எஸ்.உமாபதி, மாரிமுத்து, ராமஜெயம், கருணாநிதி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai