சுடச்சுட

    

    வடலூர் அருகே கிராமத்தில் வீட்டினுள் புகுந்து பொருள்களைச் சேதப்படுத்தி, பெண்களைத் தாக்கிய இளைஞர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள், பாமக நிர்வாகிகளுடன் வடலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
     கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடலூர் காவல் சரகத்துக்கு உள்பட்ட ராஜாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தாக்கினராம்.
     இதுதொடர்பாக பாஸ்கர் வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அவர்களது நண்பர்கள் சிலருடன் பாஸ்கரன் வீட்டிற்கு திங்கள்கிழமை சென்றுள்ளனர். அங்கு பாஸ்கரன் இல்லாததால், அவர்கள் அருகில் இருந்த சிலரது வீட்டினுள் புகுந்து அங்கிருந்த பொருள்களை அடித்து சேதப்படுத்தியதுடன், பெண்களையும் தாக்கி தப்பிச் சென்றனராம்.
     சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கேடசன், வடலூர் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், குற்றவாளிகளை கைது செய்வதாகக் கூறிச் சென்றனராம்.
     ஆனால், செவ்வாய்க்கிழமை காலை வரை குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், பாமக மாநில துணைச் பொதுச் செயலர் தாமரைகண்ணன், மாவட்டச் செயலர்கள் ஆறுமுகம், சண்.முத்துக்கிருஷ்ணன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர்கள் செல்வசோழன், ஜெயராகவன் மற்றும் நிர்வாகிகளுடன் சேர்ந்து, வடலூர் காவல் நிலைய வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
     ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
     அப்போது, பேசிய பாமக மாநில துணை பொதுச்செயலர் தாமரைக்கண்ணன், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால், புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
     மேலும், டிஐஜியிடம் மனு அளிக்கப்படும் எனக் கூறினார். போராட்டத்தால் வடலூர் காவல் நிலையம் முன் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai