சுடச்சுட

    

    குப்பைக் கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    By  நெய்வேலி,  |   Published on : 13th December 2017 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட விழமங்கலம் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்க அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
     பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டு பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 30 டன் அளவுக்கு குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
     மணி நகர் பகுதியில் அமைக்கப்பட்ட குப்கைக் கிடங்கில் குப்பை கொட்ட அந்தப் பகுதி அனுமதிக்காததைத் தொடர்ந்து, தற்போது, கெடிலம் நதியோரம் உள்ள மயானப் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
     இந்த நிலையில், விழமங்கலம் 1 மற்றும் 2-வது வார்டு பகுதியில் திரெüபதியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகேயுள்ள சுமார் 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட புறம்போக்கு குட்டையில் குப்பைக் கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
     இதுதொடர்பான பேச்சுவார்த்தை பண்ருட்டி வட்டாட்சியர் விஜய்ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர்(பொறுப்பு) வெங்கடாசலம், விழமங்கலம் பகுதி முன்னாள் கவுன்சிலர்கள் பழனி, சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் அதிகரித்ததால், வட்டாட்சியர் விஜய்ஆனந்த் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதாகக் கூறி கூட்டத்தை கலைந்து போகச் செய்தார்.
     பின்னர், மாலை சுமார் 4.30 மணி அளவில் வட்டாட்சியர் விஜய் ஆனந்த், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
     அப்போது, அந்தப் பகுதி மக்கள் கோயில், குடியிருப்புகள் உள்ள பகுதியில் குப்பைக் கிடங்கு அமைத்தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
     அப்போது பேசிய வட்டாட்சியர் விஜய்ஆனந்த், குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மனு எழுதி கொடுத்தால் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai