Enable Javscript for better performance
சுவர் விளம்பரம் சேதம்: விசிகவினர் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    சுவர் விளம்பரம் சேதம்: விசிகவினர் சாலை மறியல்

    By  நெய்வேலி,  |   Published on : 13th December 2017 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல்லிக்குப்பம் அருகே எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     ஏப்.14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் எழுதி வருகின்றனர்.
     பண்ருட்டி அடுத்துள்ள குச்சிப்பாளையம் பகுதியில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த தொல்.திருமாவளவன் உருவப்படத்தின் மீது திங்கள்கிழமை இரவு யாரோ ஆயில் ஊற்றி சேதப்படுத்தியிருந்தனர். தகவல் அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் தாமரைச்செல்வன் தலைமையில், மாநில துணைச் செயலர் சக்திவேல், ஒன்றியச் செயலர் நிலவன், ஒருங்கிணைப்பாளர் வாசன், மாவட்ட துணை அமைப்பாளர் உதயன் உள்ளிட்டோர் கடலூர்-பண்ருட்டி சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai