சுடச்சுட

    

    செங்கால் ஓடையில் மாவட்ட வழங்கல் அதிகாரி ஆய்வு

    By  நெய்வேலி,  |   Published on : 13th December 2017 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறிஞ்சிப்பாடியில் உள்ள செங்கால் ஓடையை மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, அயன் குறிஞ்சிப்பாடி, ரெட்டிப்பாளையம், கல்குணம் ஆகிய கிராமங்கள் வழியாக செங்கால் ஓடை சென்று பரவனாற்றில் கலக்கிறது.
     இந்த ஓடை மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
     அண்மையில் பெய்த மழையால் கல்குணத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்பணை உடைந்தது. இதனால், பூந்தோட்டம் வாய்க்கால், சின்ன செங்கால் ஓடையில் தண்ணீர் செல்வது தடைபட்டதால், அப்பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.
     இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், செங்கால் ஓடையில் தடுப்பணை கட்டி புந்தோட்டம் வாய்க்கால், சின்ன செங்கால் ஓடையில் தண்ணீரை திருப்பி விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
     இதைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணி ஆகியோர் செங்கால் ஓடை பகுதியை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:செங்கால் ஓடையில் தாற்காலிகமாக தடுப்பணை கட்டி பூந்தோட்டம், வாய்க்கால் சின்ன செங்கால் ஓடையில் தண்ணீரை திருப்பிவிட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி என்எல்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளோம். என்எல்சி அதிகாரிகள் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai