சுடச்சுட

    

    டெங்கு கொசு ஒழிப்பு: தொழில்பேட்டையில் ஆட்சியர் ஆய்வு

    By  கடலூர்,  |   Published on : 13th December 2017 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கடலூரில் உள்ள சிட்கோ தொழில்பேட்டை அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
     தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறிந்து அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
     அதன்படி, கடலூரில் உள்ள தொழில் மையம், சிட்கோ தொழில்பேட்டை அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
     அப்போது, அங்குள்ள உபயோகமற்ற பொருள்களை அப்புறப்படுத்தி, மழைநீர் தேங்காவண்ணம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் எனவும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீரை சுகாதாரமாக பராமரிப்பதோடு, தினம்தோறும் குளோரினேஷன் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
     ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மாயத்தேவர், சிட்கோ தொழிற்பேட்டை உதவி மேலாளர் முகமதாபேகம், நகராட்சி ஆணையர் நெ.முஜிபுர்ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai