சுடச்சுட

    

    விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் பாரதியாரின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
     விழாவில் பள்ளித் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். பள்ளி முதுநிலை முதல்வர் சங்கரய்யா, பள்ளி முதல்வர் ஈஸ்வரிமகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     விழாவில் மாணவ, மாணவிகள் பாரதியாரைப் போன்று வேடமணிந்து வந்து, அவர் இயற்றிய பாடல்களை பாடினர். மேலும், நாட்டுப்பற்றை வலியுறுத்தும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. முன்னதாக, பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
     நிகழ்ச்சியில் பள்ளி மேலாண் அலுவலர் சேதுராமன், மக்கள் தொடர்பு அலுவலர் ஞானபிரகாசம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
     அன்பு நிறைமலர் ஜோதி அறக்கட்டளை சார்பில், பாரதியார் பிறந்த நாள் விழா கடலூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியில் உள்ள பாரதியாரின் சிலைக்கு பொதுச்செயலாளர் அ.அர்த்தநாரி தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரசு வழக்குரைஞர் சாமிக்கண்ணு முன்னிலை வகித்தார்.
     பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.குமார் வாழ்த்திப் பேசினார். மாணவர்கள் பவதாரணி, சபாபதி ஆகியோர் பாரதியார் பாடல் பாடினர்.
     நிர்வாகிகள் விஜயபாரதி, தட்சிணாமூர்த்தி, வெண்புறா அமைப்புத் தலைவர் இரா.சண்முகம், திருவேங்கடம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
     சிதம்பரம் பள்ளியில்...
     சிதம்பரம், டிச.12: சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்புக் கூட்டு வழிபாடு நடைபெற்றது.
     விழாவின் தொடக்கமாக பாரதியாரின் படத்துக்கு மரியாதை செலுத்தி அவரின் கவிதைகளையும், பொன்மொழிகளையும் மாணவ, மாணவிகள் வாசித்தனர்.
     பின்னர், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த மாணவரை அனைவரும் பாராட்டினர் (படம்).
     விழாவில் சிறப்பு விருந்தினரான பங்கேற்ற குருபோதகர் ஜெ.ஜோஷ்வா கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பைக் கூறி, நாட்டு மக்களின் நலனுக்காகவும், மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்.
     பின்னர், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் நடத்திய மின்சிக்கன வாரப் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பிளஸ்-1 மாணவி எஸ். திவ்யாவுக்கு பதக்கம் மற்றும் விருது வழங்கி சிறப்பித்தார். மேலும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 32 மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் கூடுதல் செயலர் எஸ். கஸ்தூரி பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
     விழாவில் பள்ளி முதல்வர் கோ.சக்தி, துணை முதல்வர் ஜி.ஷீலா, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai