சுடச்சுட

  

  கடலூரில் பல்வேறு அமைப்புகளால் மாற்றுத்திறனாளிகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
   மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியான கடலூர் தயா பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
   பள்ளியின் பெற்றோர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் கல்வி நிறுவன அறக்கட்டளை செயலாளர் கே.திருமலை தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் பணியில் அரசின் பங்கு குறித்தும், பெற்றோரின் கடமை குறித்தும் சிறப்புரையாற்றினார்.
   பெற்றோர் சங்கத் தலைவர் ஏ.ராஜகோபால், செயலாளர் என்.சதாசிவம், அறக்கட்டளை நிர்வாகிகள் சீனுவாசன், பி.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை எம்.வானதி நன்றி கூறினார்.
   கடலூரிலுள்ள அன்பின் பணியாளர்கள் சபை, தூய இதய மரியன்னை கன்னியர்கள் சபை சார்பில் கடலூரிலுள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
   புதுவை மறைமாவட்ட முதன்மைகுரு அருளானந்தம் தலைமை வகிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிப் பேசினார். மேலும், சகோதர வாழ்வு சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
   நிகழ்ச்சியில் பாதிரியார் விசுவாசம், குவனெல்லியகுருக்கள், கன்னியாஸ்திரிகள் பங்கேற்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai