Enable Javscript for better performance
ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: நடவடிக்கைக்கு பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: நடவடிக்கைக்கு பரிந்துரை

    By  நெய்வேலி,  |   Published on : 13th December 2017 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலியில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக, துறை சார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் தெரிவித்தார்.
     நெய்வேலி, 4-ஆவது வட்டத்தில் சரவணபவ கூட்டுறவு சிறப்பங்காடியின் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது.
     இதன் விற்பனையாளராக ராமலிங்கம் பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கடையில் இருந்த இருவர் ரேஷன் அரிசியை வாகனத்தில் ஏற்றி கடத்த முயன்றனர். இதனை, அந்த வழியாக வந்த வருவாய் ஆய்வாளர் கருப்பையா தனது செல்லிடப்பேசியில் படம் எடுத்தார். இதை அறிந்த இருவரும் கருப்பையாவை நியாய விலைக் கடையில் அடைத்து சிறை பிடித்தனர்.
     அங்கிருந்து தப்பி வந்த கருப்பையா சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியருக்கு தகவல் அளித்தார்.
     இதைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், வட்டாட்சியர் ஜான்சிராணி, வட்ட வழங்கல் அலுவலர் சுமித்ரா ஆகியோர் போலீஸாருடன் சென்று ஆய்வு செய்தனர்.
     ரேஷன் அரிசி கடத்தலை புகைப்படம் எடுத்த வருவாய் ஆய்வாளர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
     இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் கூறுகையில், ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் தொடர்பாக நியாய விலைக்கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சரவணபவ கூட்டுறவு சிறப்பங்காடி மேலாண் இயக்குநருக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai