சுடச்சுட

  

  பண்ருட்டி நகராட்சி வரி உயர்வு கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் வரி செலுத்துவோர் நலச் சங்கம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   பண்ருட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் தலைமை வகித்தார்.
   கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக டி.சண்முகம், செயலராக வி.வீரப்பன், பொருளராக பி.சிவகுரு, சட்ட ஆலோசகர் மற்றும் துணைத் தலைவராக வழக்குரைஞர் இதயதுல்லா, துணைத் தலைவர்களாக எஸ்.விஜயரங்கன், ஜி.சிவராமன், வழக்குரைஞர் டி.ஏ.பக்கிரிசாமி, இணைச் செயலர்களாக எஸ்.சுந்தரராஜன், டி.ரகு, ஜி.ராஜேந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஜி.காமராஜ், எல்.பி.சம்பத்லால், எஸ்.அருள்பிரகாசம், ஆர்.ஜானகிராமன், ஆர்.மோகன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
   நகராட்சிக்கு உள்பட்ட வீடுகள், கடைகள், காலி மனைகள் சம்பந்தபட்ட வரிகளை முறைப்படுத்தி நகராட்சியுடன் கலந்து பேசி, பொதுமக்கள் நலம் பெறும் வகையில், இணைந்து செயல்படுவது என முடிவு செய்தனர். கூட்டத்தில், பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai