Enable Javscript for better performance
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க நிதி: விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க நிதி: விண்ணப்பிக்க அழைப்பு

    By  கடலூர்,  |   Published on : 13th December 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் ஏழ்மை நிலையிலுள்ள வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் நிதியைப் பெற வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசினால் பண்டிட் தீன்தயாள் உபத்யாய் தேசிய பொது நல நிதியை பெறுவதற்கு வீரர், வீராங்கனைகள் தேசிய அளவில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையால் தேசிய விளையாட்டு பெடரேஷசன், ஒலிம்பிக் கழகத்தினால் நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் இந்திய பல்கலைகழகங்களால் நடத்தப்படும் விளையாட்டு போட்டியில் தனிநபர் அல்லது குழு விளையாட்டில் முதல் மூன்று இடங்களை பெற்றிருக்க வேண்டும்.
     ஜூனியர், சப்-ஜூனியர், சீனியர் அளவிலான ஒலிம்பிக், ஆசிய அளவிலான போட்டிகள், காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் வீரர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 20-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai