சுடச்சுட

  

  ஒரே காவல் நிலையத்தில் குறிப்பிட்ட காலம் பணிபுரிந்த 74 காவலர்களை பணியிட மாற்றம் செய்து கடலூர் மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.
   கடலூர் மாவட்டத்தில் 7 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இந்தக் காவல் உட்கோட்டங்களில் உள்ள பல்வேறு பிரிவு காவல் நிலையங்களில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்வது வழக்கம்.
   அதன்படி, தற்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்து பணியாற்றி வரும் காவலர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களை பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் செய்வதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
   அதன்படி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 10 பேர், பெண் காவலர்கள் 7 பேர் உள்பட மொத்தம் 74 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக பணியில் சேருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai