Enable Javscript for better performance
அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தருடன்  என்எல்சி இந்தியா நிறுவன அதிகாரிகள் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தருடன்  என்எல்சி இந்தியா நிறுவன அதிகாரிகள் சந்திப்பு

    By DIN  |   Published on : 14th December 2017 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.மணியனை புதன்கிழமை என்எல்சி இந்தியா நிறுவன அதிகாரிகள் சிதம்பரத்தில் சந்தித்தனர்.
    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.மணியனை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல் கண்காணிப்புத் துறை அதிகாரிகளான பொது மேலாளர் மணிவண்ணன், முதன்மை மேலாளர் ரவிசங்கர் செப்பூரி ஆகியோர் நேரில் சந்தித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தில்  நடைபெறவுள்ள தேசிய ஆற்றல் சேமிப்பு தின விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை வழங்கினர். 
    அப்போது, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஆற்றல் சேமிப்புக்காக மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் குறித்து, துணை வேந்தர் ஆர்வமுடன் கேட்டறிந்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai