சுடச்சுட

  

  தமிழக ஆளுநர் கடலூர் வருகையையொட்டி, சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விருத்தாசலத்தில் அரிமா சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் வியாழக்கிழமை (டிச. 14) பங்கேற்கிறார். பின்னர், கடலூர் விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு, வெள்ளிக்கிழமை (டிச. 15) பிற்பகல்  சென்னைக்கு செல்லவுள்ளதாகத் தெரிகிறது. 
  இந்த நிலையில், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு கார் மூலமாக வருவதால்,  அந்தச் சாலையில் உருவாகியிருந்த பள்ளங்களைச் சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 
  மேலும், சில இடங்களில் வேகத் தடைகளை அகற்றும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, கடலூரிலிருந்து கார் மூலமாக புதுச்சேரி வழியாகச் சென்னைக்குச் செல்லக்கூடும் என்பதால்,  அவர் செல்லும் வழித்தடச் சாலைகளைச் சீரமைக்கும் பணியிலும் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
  அண்மையில், மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழையால் சாலைகள் கடுமையாக பாதிப்படைந்தன. எனவே, பாதிப்படைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி, பல்வேறு கட்சியினரும்,  அமைப்பினரும் கோரிக்கை விடுத்து, போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
  இந்த நிலையில், செப்பனிடப்படாமல் இருந்த சாலைகள் தற்போது ஆளுநரின் வருகையையொட்டி, விரைந்து சீர் செய்யப்பட்டு வருகின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai