சுடச்சுட

    

    நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து ஊராட்சியில் இசைப் பயிற்சிப் பள்ளி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
    நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் 2-ஆவது அனல் மின் நிலையத்தில் துணை முதன்மை மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் அந்தோணிராஜ். இவர்,  கடந்த 30 ஆண்டுகளாக நெய்வேலி பகுதியில் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு இசைக் கருவிகளை இயக்கும் பயிற்சியை அளித்து வருகிறார்.
    தற்போது இவர்,  குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி மாருதி நகரில் இசைப் பயிற்சிப் பள்ளியை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழாவுக்கு வடக்குத்து ஊராட்சியின் முன்னாள் தலைவர் கோ.ஜெகன் தலைமை வகித்தார். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் முத்து, தலைமைப் பொது மேலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட  புதுச்சேரி மறைமாவட்ட போதகர்  மரியஜோசப் இசைப் பயிற்சிப் பள்ளியைத் தொடக் கிவைத்துப் பேசினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai