சுடச்சுட

  

  எஸ்சி, எஸ்டி பிரிவு இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 14th December 2017 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதல் தலைமுறையைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவு இளைஞர்கள் புதிதாகத் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் - தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் திட்டத்தை அறிவித்து,  2012 - 13 ஆம்  ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில்,  படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குத் தொழில் முறைவோர் பயிற்சி,  திட்ட அறிக்கை தயார் செய்தல்,  நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற வசதி செய்து தருதல், கனரகத் தொழில் நிறுவனங்களுடன் வியாபாரத் தொடர்பை ஏற்படுத்தித் தருதல் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படும்.
  இந்தத் திட்டத்தின் கீழ்,  உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு ரூ. ஒரு கோடி வரை வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாக கடனுதவி பெற வழிவகை செய்யப்படும்.  தமிழக அரசு மானியமாக 25 சதவீதமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.
  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு பட்டம், பட்டயம் அல்லது தொழில் கல்வி முடித்திருக்க வேண்டும்.
  வயது வரம்பு:  21 வயது முதல் 45 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ. ஒரு கோடி வரையிலான உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  மத்திய,  மாநில அரசின் ஏதேனும் ஒரு மானியத்துடன் கூடிய திட்டங்களின் கீழ், ஏற்கெனவே பயனடைந்தவர் இந்தத் திட்டத்தின் கீழ், உதவி பெற இயலாது.
  இந்தத் திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌n‌e‌e‌d‌s  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  மேலும், விபரங்களுக்கு கடலூர் செம்மண்டலத்திலுள்ள  மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளரை அணுகலாம் எனத் தெரிவித்தார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai