ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம்
By DIN | Published on : 14th December 2017 02:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிதம்பரம் வட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திரச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
அந்தச் சங்கத்தின் தலைவர் ரா.மகாலிங்கம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கடவுள் வாழ்த்து பாடினார். கெளரவத் தலைவர் க.சின்னசாமி வரவேற்றார். செயலர் கண்ணன் வரவு - செலவுக் கணக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தின் நடவடிக்கைகள் குறித்து பரமசிவம் பேசினார். கூட்டத்தில் சங்கரசுப்பிரமணியன், எஸ்.பரமசிவம், தங்க.சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
தீர்மானங்கள்: 8-ஆவது ஊதியக் குழுப் பணப் பயன்களை உடனடியாக உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்க ஆவண செய்த சிதம்பரம் வட்டக் கருவூல அலுவலருக்கு நன்றி தெரிவிப்பது, ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதால், உறுப்பினர்களுக்கு சராசரியாக ரூ. 2 ஆயிரம் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளதால் உறுப்பினர்கள் சங்க வளர்ச்சிக்கு நிதியாக ரூ. 500 வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.